• Nov 26 2024

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை..! மருத்துவ நிபுணர் வெளியிட்ட தகவல்

HIV
Chithra / Feb 29th 2024, 8:59 am
image

 

புதிதாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.

இதன்படி, 611 ஆண்கள் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது 88 வீதமாகும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

மேலும், இந்த காலப்பகுதியில், 81 பெண்கள் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  இது 11.7 சதவீதமாகும்.

இதன்படி, சமூகத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 4,100 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானால், அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சுமார் எட்டு வருடங்கள் ஆகும் என வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எச்.ஐ.வி அறிகுறிகளுக்கு நிகரான அவதானங்கள் தென்பட்டால், எச்.ஐ.வி பரிசோதனை அவசியம் எனவும், அதற்காக பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை. மருத்துவ நிபுணர் வெளியிட்ட தகவல்  புதிதாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு, 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.இதன்படி, 611 ஆண்கள் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது 88 வீதமாகும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.மேலும், இந்த காலப்பகுதியில், 81 பெண்கள் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  இது 11.7 சதவீதமாகும்.இதன்படி, சமூகத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 4,100 என மதிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானால், அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சுமார் எட்டு வருடங்கள் ஆகும் என வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, எச்.ஐ.வி அறிகுறிகளுக்கு நிகரான அவதானங்கள் தென்பட்டால், எச்.ஐ.வி பரிசோதனை அவசியம் எனவும், அதற்காக பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement