• Apr 28 2024

இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்பு:பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!SamugamMedia

Sharmi / Feb 24th 2023, 1:27 pm
image

Advertisement

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பூரண அனுமதியுடன் இஸ்ரேல் நாட்டில் தாதியர் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக தெரிவித்து அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலச்சினையை பயன்படுத்தி போலியான விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை ஏமாற்றிய நபரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பத்தரமுல்லை தியத்த உயன வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குறித்த சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து தலா 4 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவரையும் கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், இரண்டு ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்பு:பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைதுSamugamMedia வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பூரண அனுமதியுடன் இஸ்ரேல் நாட்டில் தாதியர் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக தெரிவித்து அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலச்சினையை பயன்படுத்தி போலியான விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை ஏமாற்றிய நபரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பத்தரமுல்லை தியத்த உயன வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குறித்த சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து தலா 4 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இருவரையும் கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், இரண்டு ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement