• Apr 19 2024

ஒடிசா விபத்து..! மகனை தொலைக்காட்சி நேரலை மூலம் கண்டுபிடித்த பெற்றோர்...!samugammedia

Sharmi / Jun 9th 2023, 10:15 am
image

Advertisement

ஒடிசா-கோரமண்டல் ரயில் விபத்தின்போது காணாமல் போன மகனை, தொலைக்காட்சி நேரலை ஊடாக பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2ஆம் திகதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின.

இதில் 288ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த நேபாளத்தை சேர்ந்த ராமானந்தா பஸ்வான் (15) குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

அவரது தாய் மீரா தேவி, தந்தை ஹரி பஸ்வான் நேபாளத்தில் இருந்து ஒடிசாவுக்கு வந்து ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி அலைந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், மகனை தேடி அலையும் பெற்றோரின் பேட்டியை நேரலையாக ஒளிபரப்பு செய்துள்ளார்.

இதனிடையே ரயில் விபத்தில் படுகாயமடைந்த ராமானந்தா பஸ்வான், ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் தனது தாய், தந்தையின் பேட்டி ஒளிபரப்பானதை பார்த்த ராமானந்தா மருத்துவர்களிடம் தனது பெற்றோரை அடையாளம் காட்டினார்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், தனியார் தொலைக்காட்சி நிருபரை தொடர்பு கொண்டது. அந்த நிருபரின் உதவியால் மகனுடன் பெற்றோர் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.



ஒடிசா விபத்து. மகனை தொலைக்காட்சி நேரலை மூலம் கண்டுபிடித்த பெற்றோர்.samugammedia ஒடிசா-கோரமண்டல் ரயில் விபத்தின்போது காணாமல் போன மகனை, தொலைக்காட்சி நேரலை ஊடாக பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 2ஆம் திகதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இதில் 288ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த நேபாளத்தை சேர்ந்த ராமானந்தா பஸ்வான் (15) குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவரது தாய் மீரா தேவி, தந்தை ஹரி பஸ்வான் நேபாளத்தில் இருந்து ஒடிசாவுக்கு வந்து ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி அலைந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், மகனை தேடி அலையும் பெற்றோரின் பேட்டியை நேரலையாக ஒளிபரப்பு செய்துள்ளார்.இதனிடையே ரயில் விபத்தில் படுகாயமடைந்த ராமானந்தா பஸ்வான், ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் தனது தாய், தந்தையின் பேட்டி ஒளிபரப்பானதை பார்த்த ராமானந்தா மருத்துவர்களிடம் தனது பெற்றோரை அடையாளம் காட்டினார்.இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், தனியார் தொலைக்காட்சி நிருபரை தொடர்பு கொண்டது. அந்த நிருபரின் உதவியால் மகனுடன் பெற்றோர் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement