• Apr 27 2024

ஒடிசா ரயில் விபத்து: 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது! - வெளியான பகீர் தகவல் samugammedia

Chithra / Jun 4th 2023, 10:29 am
image

Advertisement

ரயில்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருப்பது தற்போது ஒடிசா விபத்துக்குப்பின் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஒடிசாவில் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதன் பின்னணியில், தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருக்கிறார்.

முன்னதாக பிப்ரவரி 8ம் தேதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

பின் அது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி, சிக்னலில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். 


அது தற்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஒடிசா ரயில் விபத்து: 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது - வெளியான பகீர் தகவல் samugammedia ரயில்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருப்பது தற்போது ஒடிசா விபத்துக்குப்பின் தெரியவந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு ஒடிசாவில் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதன் பின்னணியில், தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருக்கிறார்.முன்னதாக பிப்ரவரி 8ம் தேதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பின் அது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி, சிக்னலில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். அது தற்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement