• Aug 04 2025

யாழில் பிரதமரின் கலந்துரையாடலில் நித்திரை கொண்ட அதிகாரிகள்!

shanuja / Aug 4th 2025, 5:12 pm
image

வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் பிரதமர் கலந்துகொண்ட  கலந்துரையாடலில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.


க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 


இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. 


குறித்த கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்ட நிலையில் அதிகாரிகள் இவ்வாறு நித்திரை செய்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் பிரதமரின் கலந்துரையாடலில் நித்திரை கொண்ட அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் பிரதமர் கலந்துகொண்ட  கலந்துரையாடலில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்ட நிலையில் அதிகாரிகள் இவ்வாறு நித்திரை செய்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement