• Oct 01 2023

கிளிநொச்சி கச்சேரியில் கேக் வெட்டிய உத்தியோகத்தர்கள்!

Sharmi / Dec 19th 2022, 4:15 pm
image

Advertisement

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில், கிளிநொச்சி மாவட்ட செயலகம் இரண்டாவது தடவையாக முதலிடத்தை பெற்றுள்ளது.

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டிக்கான மதிப்பீட்டுத் தேர்வு கள விஜயத்திற்கான சாதகமான மதிப்பெண்ணை கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்ற நிலையில், கடந்த 25ஆம் திகதியன்று நேரடியாக கள விஜயம் இடம்பெற்றது.

இதன்போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திலிருந்து வருகை தந்த மதிப்பீட்டு குழுவினர் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒவ்வொரு கிளைகளையும் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இம்முறையும் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார்.



கிளிநொச்சி கச்சேரியில் கேக் வெட்டிய உத்தியோகத்தர்கள் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில், கிளிநொச்சி மாவட்ட செயலகம் இரண்டாவது தடவையாக முதலிடத்தை பெற்றுள்ளது.தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டிக்கான மதிப்பீட்டுத் தேர்வு கள விஜயத்திற்கான சாதகமான மதிப்பெண்ணை கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்ற நிலையில், கடந்த 25ஆம் திகதியன்று நேரடியாக கள விஜயம் இடம்பெற்றது.இதன்போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திலிருந்து வருகை தந்த மதிப்பீட்டு குழுவினர் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒவ்வொரு கிளைகளையும் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.அதனடிப்படையில் தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இம்முறையும் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார்.

Advertisement

Advertisement

Advertisement