• May 17 2024

ஒரு முறை வீசினால் 3 லட்சம் பேர் காலி… சக்தி வாய்ந்த அணு ஆயுத தயாரிப்பில் அமெரிக்கா! samugammedia

Tamil nila / Nov 5th 2023, 10:07 pm
image

Advertisement

அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சக்தி வாய்ந்த அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது. கடந்த 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோசிமா நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த ஒன்றாக அது இருக்கும்.

1960-ம் ஆண்டு பனிப்போரின்போது, உருவாக்கப்பட்ட பி61 ரக குண்டுகளில் ஒரு வகையான இந்த அணுகுண்டு ஒரு முறை வீசப்பட்டால், 3 லட்சம் ரஷியர்கள் கொல்லப்படுவார்கள்.

எனினும், இந்த பி61-13 என்ற குண்டானது, பகைவர்களை அச்சமூட்டுவதற்காக உருவாக்கப்படுகிறது என அமெரிக்கா கூறுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பி61-12 ரக குண்டை விட பெரிய ஒன்றாக ஆயுத கிடங்கில் அது சேர்க்கப்பட உள்ளது.

அமெரிக்க விண்வெளி கொள்கையின் பாதுகாப்பு துறைக்கான உதவி செயலாளர் ஜான் பிளம்ப் கூறும்போது, எதிரிகளை தடுக்கும் வகையில் நம்பக தன்மை கொண்ட திறன்களை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை செயல்படுத்துவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. தேவைப்பட்டால், தாக்குதல்களை எதிர்கொள்ளவும் மற்றும் கூட்டணி நாடுகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பும் உள்ளது என கூறியுள்ளார்.

இந்த ரக குண்டு வெடித்ததும், ஒரு மைல் தொலைவில் உள்ள அனைவரையும் கொல்வதுடன், கட்டிடங்களும் அழிந்து விடும். ஒரு மாதத்தில், 2 மைல்கள் சுற்றுப்பகுதியில் உள்ள நபர்கள் உயிரிழந்து விடுவார்கள். அந்த அளவுக்கு கதிரியக்க வெளிப்படுதல் இருக்கும்.

இவற்றில் தப்பி பிழைப்பவர்களில் 15 சதவீதத்தினர் கொடிய நோய் தாக்குதலால் பிற்காலத்தில் உயிரிழக்க கூடும். மொத்தம் 8.6 லட்சம் பேருக்கு காயமேற்படும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்த போரில், அணு ஆயுத பயன்பாட்டை பற்றி ரஷியா அடிக்கடி எச்சரித்து வருகிறது. விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி சமீபத்தில் ரஷிய அதிபர் புதின் பேசினார்.

அவர் பேசும்போது, அணு ஆயுத சோதனைகளை தொடங்கும்படி எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் உண்மையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பது பற்றி கூற நான் தயாராக இல்லை என குறிப்பிட்டார்.

அமெரிக்கா மேற்கொள்ளாதவரை நாங்கள் பரிசோதனையை மீண்டும் தொடங்க போவதில்லை என கூறிய புதின், ரஷியாவுக்கு எதிராக ஒருவரும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி நினைக்க கூடாது என தொடர்ந்து கூறினார்.

அதுபோன்ற தாக்குதல் கண்டறியப்பட்டால், ஆயிரக்கணக்கான எங்களுடைய ராக்கெட்டுகள் வானில் பறந்து சென்று ஓர் எதிரி கூட தப்புவதற்கான வாய்ப்பை தராது என்றும் கூறினார்.


ஒரு முறை வீசினால் 3 லட்சம் பேர் காலி… சக்தி வாய்ந்த அணு ஆயுத தயாரிப்பில் அமெரிக்கா samugammedia அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சக்தி வாய்ந்த அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது. கடந்த 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோசிமா நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த ஒன்றாக அது இருக்கும்.1960-ம் ஆண்டு பனிப்போரின்போது, உருவாக்கப்பட்ட பி61 ரக குண்டுகளில் ஒரு வகையான இந்த அணுகுண்டு ஒரு முறை வீசப்பட்டால், 3 லட்சம் ரஷியர்கள் கொல்லப்படுவார்கள்.எனினும், இந்த பி61-13 என்ற குண்டானது, பகைவர்களை அச்சமூட்டுவதற்காக உருவாக்கப்படுகிறது என அமெரிக்கா கூறுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பி61-12 ரக குண்டை விட பெரிய ஒன்றாக ஆயுத கிடங்கில் அது சேர்க்கப்பட உள்ளது.அமெரிக்க விண்வெளி கொள்கையின் பாதுகாப்பு துறைக்கான உதவி செயலாளர் ஜான் பிளம்ப் கூறும்போது, எதிரிகளை தடுக்கும் வகையில் நம்பக தன்மை கொண்ட திறன்களை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை செயல்படுத்துவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. தேவைப்பட்டால், தாக்குதல்களை எதிர்கொள்ளவும் மற்றும் கூட்டணி நாடுகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பும் உள்ளது என கூறியுள்ளார்.இந்த ரக குண்டு வெடித்ததும், ஒரு மைல் தொலைவில் உள்ள அனைவரையும் கொல்வதுடன், கட்டிடங்களும் அழிந்து விடும். ஒரு மாதத்தில், 2 மைல்கள் சுற்றுப்பகுதியில் உள்ள நபர்கள் உயிரிழந்து விடுவார்கள். அந்த அளவுக்கு கதிரியக்க வெளிப்படுதல் இருக்கும்.இவற்றில் தப்பி பிழைப்பவர்களில் 15 சதவீதத்தினர் கொடிய நோய் தாக்குதலால் பிற்காலத்தில் உயிரிழக்க கூடும். மொத்தம் 8.6 லட்சம் பேருக்கு காயமேற்படும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.இந்த போரில், அணு ஆயுத பயன்பாட்டை பற்றி ரஷியா அடிக்கடி எச்சரித்து வருகிறது. விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி சமீபத்தில் ரஷிய அதிபர் புதின் பேசினார்.அவர் பேசும்போது, அணு ஆயுத சோதனைகளை தொடங்கும்படி எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் உண்மையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி கூற நான் தயாராக இல்லை என குறிப்பிட்டார்.அமெரிக்கா மேற்கொள்ளாதவரை நாங்கள் பரிசோதனையை மீண்டும் தொடங்க போவதில்லை என கூறிய புதின், ரஷியாவுக்கு எதிராக ஒருவரும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி நினைக்க கூடாது என தொடர்ந்து கூறினார்.அதுபோன்ற தாக்குதல் கண்டறியப்பட்டால், ஆயிரக்கணக்கான எங்களுடைய ராக்கெட்டுகள் வானில் பறந்து சென்று ஓர் எதிரி கூட தப்புவதற்கான வாய்ப்பை தராது என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement