முல்லைத்தீவு - மாங்குளம் - கற்குவாரி பகுதியில் பாதுகாப்பற்ற விதத்தில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட குழந்தைக்கு சுகவீனமடைந்துள்ளது.
இதனையடுத்து குறித்த குழந்தை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு முல்லைத்தீவில் துயரம் முல்லைத்தீவு - மாங்குளம் - கற்குவாரி பகுதியில் பாதுகாப்பற்ற விதத்தில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட குழந்தைக்கு சுகவீனமடைந்துள்ளது. இதனையடுத்து குறித்த குழந்தை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தது. குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.