• Jan 11 2025

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

Chithra / Jan 1st 2025, 1:40 pm
image


இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்கமுவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று (31) காலை மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எலபாத்த பொலிஸார் தெரிவித்தனர். 

இரத்தினபுரி, ஹங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் ஹங்கமுவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலிகளைப் பொருத்திய சந்தேக நபர்களைக் கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்கமுவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று (31) காலை மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எலபாத்த பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி, ஹங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹங்கமுவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலிகளைப் பொருத்திய சந்தேக நபர்களைக் கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement