• Mar 04 2025

மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு..!

Sharmi / Mar 3rd 2025, 11:31 am
image

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை, மின்னல், பலத்த காற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரியில் பெய்த கனமழை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், 177 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அதேவேளை, காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை, மின்னல், பலத்த காற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.அத்துடன் இரத்தினபுரியில் பெய்த கனமழை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், 177 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement