• Nov 13 2025

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தோருக்கு தொடரும் ஆப்பு; யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விற்பனை நிலையம்

Chithra / Nov 11th 2025, 8:21 am
image


சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது.

சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம்  அனுப்பப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனொரு கட்டமாக குறித்த நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தோருக்கு தொடரும் ஆப்பு; யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விற்பனை நிலையம் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது.சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம்  அனுப்பப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இதனொரு கட்டமாக குறித்த நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement