• May 19 2024

இறந்தவர்களை எம்பாமிங் செய்வதற்கான கற்கைநெறியை தொடர இளைஞர்களுக்கு வாய்ப்பு!

Sharmi / Dec 5th 2022, 10:13 am
image

Advertisement

நாட்டிலுள்ள இளைஞர்களுக்காக  தேசிய தொழிற் பயிற்சி சபையின் அனுமதியுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் எம்பாமிங் கற்கைநெறியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இறுதிச்சடங்கு பணிப்பாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த பனாகொட தெரிவித்தார்.

குறித்த கற்கைநெறிக்கு என்.வி.கியூ 4, 5 இன் கீழ் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் எம்பாமிங் செய்ய எம்பாமிங் பயிற்சி பாடசாலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சஜித் எதிரிசிங்கவின் முயற்சியின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பயிற்சிக்கு 40 பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார். 

குறித்த விண்ணப்பதாரர்களுக்கு இறந்த உடல்களை எம்பாமிங் செய்யவும்,  வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பவும் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.

 410, அதுரிகிரிய வீதி,  மாலபே என்ற முகவரியில் இந்தப் பயிற்சிப் பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  எனவும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பமும் இதற்காக பயன்படுத்தப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

இறந்தவர்களை எம்பாமிங் செய்வதற்கான கற்கைநெறியை தொடர இளைஞர்களுக்கு வாய்ப்பு நாட்டிலுள்ள இளைஞர்களுக்காக  தேசிய தொழிற் பயிற்சி சபையின் அனுமதியுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் எம்பாமிங் கற்கைநெறியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இறுதிச்சடங்கு பணிப்பாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த பனாகொட தெரிவித்தார்.குறித்த கற்கைநெறிக்கு என்.வி.கியூ 4, 5 இன் கீழ் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் எம்பாமிங் செய்ய எம்பாமிங் பயிற்சி பாடசாலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சஜித் எதிரிசிங்கவின் முயற்சியின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பயிற்சிக்கு 40 பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார். குறித்த விண்ணப்பதாரர்களுக்கு இறந்த உடல்களை எம்பாமிங் செய்யவும்,  வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பவும் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் கூறினார். 410, அதுரிகிரிய வீதி,  மாலபே என்ற முகவரியில் இந்தப் பயிற்சிப் பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  எனவும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பமும் இதற்காக பயன்படுத்தப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement