• May 19 2024

தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் 'தமிழ் மரபுத் திங்கள்' நிகழ்வுகள்

Chithra / Dec 5th 2022, 10:23 am
image

Advertisement

ஸ்காபரோவில் அமைந்திருக்கும் தமிழ்கல்விப் பணிமனை முன்றலில் ஜனவரி 1ம் தினதி சனிக்கிழமை மரபுத் திங்கள் என வரையறுக்கப்பட்ட மரபுசார் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதுதொடர்பில் 'தமிழ் மரபுரிமை நடுவம்' அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,

மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட, தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தவல்ல ‘தமிழ் மரபுத் திங்கள்' என்ற அரிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அதற்கமைய நாம் ஆண்டுதோறும் மரபுசார் நிகழ்வுகளை முன்னடுத்து வருகின்றோம்.

மரபுத் திங்கள் என வரையறுக்கப்பட்ட நாள்களில் எமது சமூகம் நாட்டின் பல பகுதிகளிலும் மரபுசார் நிகழ்வுகளை முன்னெடுப்பது வழமை. பண்பாடு, மரபுகள் சார்ந்த விழிப்புணர்வை யாவருக்கும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளைத் திட்டமிட்டு வடிவமைத்துப் பயன்மிக்கதாக்குவதே தமிழ் மரபுரிமை நடுவத்தின் முதன்மை இலக்காகும்.

2023 - மரபுசார் நிகழ்வுகளுக்கான கருப்பொருள்:

இவ்வாண்டுக்கான கருப்பொருளாகத் ‘தமிழிசைத் தொன்மை - புரிதலும் பேணலும்’ என்ற பொருண்மைத் தொடர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மரபுரிமை நிகழ்வுகளை முன்னெடுக்கும் அமைப்புகள் யாவும் இக்கருப்பொருளை உள்வாங்கி நிகழ்வுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத் தமிழ் மரபுரிமை நடுவம் விடுக்கின்றது.

கருப்பொருள் பதாதை (Poster) வெளியீடு-

மரபுசார் நிகழ்வுகளுக்கான கருப்பொருளை வெளிப்படும் பதாதை டிசம்பர் 16ம் நாள் வெளியிடப்படவுள்ளது.

ஸ்காபரோவில் அமைந்திருக்கும் தமிழ்கல்விப் பணிமனை முன்றலில் ஜனவரி 1ம் நாள் சனிக்கிழமை காலை பத்து மணிக்குக் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறும். ஜனவரி 28 அன்று நிறைவு நாள் நிகழ்வு நடைபெறும்.

நிகழ்வுகள்: டிசம்பர் 16, 2022. - பதாதை வெளியீடு, ஜனவரி 01, 2023, ஜனவரி 07, 2023, மரபுத் திங்கள் கொடியேற்றம் - காலை 10 மணி, தொடக்கநாள் நிகழ்வு - மாலை 6 மணி (இடம் பின்னர் அறியத் தரப்படும்), ஜனவரி 28, 2023 - நிறைவு விழா. - காலை 9 மணி முதல் (Markham Convention center) 'தமிழிசைத் தொன்மை' தொடர்பான இணையவழிக் கருத்தரங்குகள் ஜனவரி 8, 15, 22ம் நாள்களில் நடைபெறும்.

பிரதேச அமைப்புகள், மக்கள் அமைப்புகள் அனைவரும் தமது மரபுசார் நிகழ்வுகளின் முதன்மை அடையாளமான பொங்கல் விழாவினை எங்கும் சிறப்பாக முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அமைப்புகள் ஒவ்வொன்றும் தாங்கள் முன்னெடுக்கும் மரபுசார் நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை எம்முடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மரபுத் திங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் முதன்மை கொடுத்து, எமது மொழி, பண்பாடு, மரபு என்பவை தொடர்பான விழிப்புணர்வை இளையோருக்கும் மற்றோருக்கும் ஏற்படுத்தும் வகையில் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என அனைத்துத் தமிழ் ஊடகங்களையும் வேண்டிக் கொள்கின்றோம். -  என்றுள்ளது. 


தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் 'தமிழ் மரபுத் திங்கள்' நிகழ்வுகள் ஸ்காபரோவில் அமைந்திருக்கும் தமிழ்கல்விப் பணிமனை முன்றலில் ஜனவரி 1ம் தினதி சனிக்கிழமை மரபுத் திங்கள் என வரையறுக்கப்பட்ட மரபுசார் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதுதொடர்பில் 'தமிழ் மரபுரிமை நடுவம்' அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட, தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தவல்ல ‘தமிழ் மரபுத் திங்கள்' என்ற அரிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அதற்கமைய நாம் ஆண்டுதோறும் மரபுசார் நிகழ்வுகளை முன்னடுத்து வருகின்றோம்.மரபுத் திங்கள் என வரையறுக்கப்பட்ட நாள்களில் எமது சமூகம் நாட்டின் பல பகுதிகளிலும் மரபுசார் நிகழ்வுகளை முன்னெடுப்பது வழமை. பண்பாடு, மரபுகள் சார்ந்த விழிப்புணர்வை யாவருக்கும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளைத் திட்டமிட்டு வடிவமைத்துப் பயன்மிக்கதாக்குவதே தமிழ் மரபுரிமை நடுவத்தின் முதன்மை இலக்காகும்.2023 - மரபுசார் நிகழ்வுகளுக்கான கருப்பொருள்:இவ்வாண்டுக்கான கருப்பொருளாகத் ‘தமிழிசைத் தொன்மை - புரிதலும் பேணலும்’ என்ற பொருண்மைத் தொடர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.மரபுரிமை நிகழ்வுகளை முன்னெடுக்கும் அமைப்புகள் யாவும் இக்கருப்பொருளை உள்வாங்கி நிகழ்வுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத் தமிழ் மரபுரிமை நடுவம் விடுக்கின்றது.கருப்பொருள் பதாதை (Poster) வெளியீடு-மரபுசார் நிகழ்வுகளுக்கான கருப்பொருளை வெளிப்படும் பதாதை டிசம்பர் 16ம் நாள் வெளியிடப்படவுள்ளது.ஸ்காபரோவில் அமைந்திருக்கும் தமிழ்கல்விப் பணிமனை முன்றலில் ஜனவரி 1ம் நாள் சனிக்கிழமை காலை பத்து மணிக்குக் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறும். ஜனவரி 28 அன்று நிறைவு நாள் நிகழ்வு நடைபெறும்.நிகழ்வுகள்: டிசம்பர் 16, 2022. - பதாதை வெளியீடு, ஜனவரி 01, 2023, ஜனவரி 07, 2023, மரபுத் திங்கள் கொடியேற்றம் - காலை 10 மணி, தொடக்கநாள் நிகழ்வு - மாலை 6 மணி (இடம் பின்னர் அறியத் தரப்படும்), ஜனவரி 28, 2023 - நிறைவு விழா. - காலை 9 மணி முதல் (Markham Convention center) 'தமிழிசைத் தொன்மை' தொடர்பான இணையவழிக் கருத்தரங்குகள் ஜனவரி 8, 15, 22ம் நாள்களில் நடைபெறும்.பிரதேச அமைப்புகள், மக்கள் அமைப்புகள் அனைவரும் தமது மரபுசார் நிகழ்வுகளின் முதன்மை அடையாளமான பொங்கல் விழாவினை எங்கும் சிறப்பாக முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அமைப்புகள் ஒவ்வொன்றும் தாங்கள் முன்னெடுக்கும் மரபுசார் நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை எம்முடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.மரபுத் திங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் முதன்மை கொடுத்து, எமது மொழி, பண்பாடு, மரபு என்பவை தொடர்பான விழிப்புணர்வை இளையோருக்கும் மற்றோருக்கும் ஏற்படுத்தும் வகையில் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என அனைத்துத் தமிழ் ஊடகங்களையும் வேண்டிக் கொள்கின்றோம். -  என்றுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement