• Apr 20 2024

நாணய நிதிய ஒப்பந்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய கோரிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 11:05 pm
image

Advertisement

நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக எடுக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்த்துள்ளார்.


நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கமற்ற வகையில் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பான நிபந்தனை அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு நிபந்தனை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என்பதற்காக  அறிக்கை நாடாளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச  நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கமற்ற வகையில் செயற்பட வேண்டும், ஆகவே நாடாளுமன்றத்தின் ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாணய நிதிய ஒப்பந்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய கோரிக்கை SamugamMedia நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக எடுக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்த்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கமற்ற வகையில் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பான நிபந்தனை அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு நிபந்தனை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என்பதற்காக  அறிக்கை நாடாளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சர்வதேச  நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கமற்ற வகையில் செயற்பட வேண்டும், ஆகவே நாடாளுமன்றத்தின் ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement