புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான தகவல்களையும், மாவீரர் நாளன்று அவரை நினைவுகூரும் நடவடிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் போராளி கதிர் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -
தற்போதைய சூழலில் தலைவர் தொடர்பான நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கான தேவை அல்லது அவசியம் எழவில்லை.எதிர்காலத்தில் அவ்வாறான தேவை ஏற்படுமானால் அப்போது அது தொடர்பில் கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களும் மாவீரர் நாளன்று தலைவர் தொடர்பான நினைவேந்தல் நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அசர்வ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, தலைவர் தொடர்பான தகவல்கள் அல்லது அவரது மரணம் குறித்த செய்திகள் இயக்கத்தின் எந்தவொரு தரப்பினாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார்.
போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ள முன்னாள் போராளி கதிர், மாவீரர்களின் கொள்கைகளையும் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் இலட்சியங்களையும் வரலாற்றின் ஊடாக முன்னெடுத்துச் சென்று வெற்றிபெற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், போராட்டக் காலத்தில் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான 'விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' தற்போது தனித்துவமாகச் செயற்பட்டு வருவதாகவும், தலைவர் வழங்கிய கடமைகளை எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான நினைவேந்தல்கள் மற்றும் மாவீரர் நாளன்று அவரை நினைவுகூரும் நிகழ்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய நிலைப்பாடு அரசியல் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ள அதேவேளை, மாவீரர்களின் பெற்றோர்களை உதாசீனம் செய்யாமல், அவர்களது உணர்வுகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளித்து செயற்படுமாறும் மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பிரபாகரனை நினைவுகூர எதிர்ப்பு - மாவீரர் நாள் தொடர்பில் புதிய நிலைப்பாடு புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான தகவல்களையும், மாவீரர் நாளன்று அவரை நினைவுகூரும் நடவடிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் போராளி கதிர் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - தற்போதைய சூழலில் தலைவர் தொடர்பான நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கான தேவை அல்லது அவசியம் எழவில்லை.எதிர்காலத்தில் அவ்வாறான தேவை ஏற்படுமானால் அப்போது அது தொடர்பில் கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.மேலும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களும் மாவீரர் நாளன்று தலைவர் தொடர்பான நினைவேந்தல் நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அசர்வ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதேவேளை, தலைவர் தொடர்பான தகவல்கள் அல்லது அவரது மரணம் குறித்த செய்திகள் இயக்கத்தின் எந்தவொரு தரப்பினாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார்.போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ள முன்னாள் போராளி கதிர், மாவீரர்களின் கொள்கைகளையும் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் இலட்சியங்களையும் வரலாற்றின் ஊடாக முன்னெடுத்துச் சென்று வெற்றிபெற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும், போராட்டக் காலத்தில் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான 'விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' தற்போது தனித்துவமாகச் செயற்பட்டு வருவதாகவும், தலைவர் வழங்கிய கடமைகளை எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான நினைவேந்தல்கள் மற்றும் மாவீரர் நாளன்று அவரை நினைவுகூரும் நிகழ்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய நிலைப்பாடு அரசியல் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ள அதேவேளை, மாவீரர்களின் பெற்றோர்களை உதாசீனம் செய்யாமல், அவர்களது உணர்வுகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளித்து செயற்படுமாறும் மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது