இலங்கையில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியொன்றுக்கு சென்ற ஒருவர் ஒரேஞ் ஜூஸை பருகியுள்ள நிலையில் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஒரேஞ் ஜூஸின் விலை 4565 ரூபா எனவும், வரிகள் 1055 ரூபா எனவும், சேவைக் கட்டணம் 456 ரூபா எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கள் காரணமாக பல ஹோட்டல்களில் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த பில் தொடர்பில் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகம் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு விலைக்கு உணவுப் பொருட்களை விற்கும்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே அதனை வாங்க மாட்டார்கள் என சமூக ஊடகங்களில் பற்றுச்சீட்டை பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இலங்கையில் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரேஞ் ஜூஸ். இலங்கையில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியொன்றுக்கு சென்ற ஒருவர் ஒரேஞ் ஜூஸை பருகியுள்ள நிலையில் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.ஒரேஞ் ஜூஸின் விலை 4565 ரூபா எனவும், வரிகள் 1055 ரூபா எனவும், சேவைக் கட்டணம் 456 ரூபா எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கள் காரணமாக பல ஹோட்டல்களில் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது.இந்த பில் தொடர்பில் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகம் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு விலைக்கு உணவுப் பொருட்களை விற்கும்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே அதனை வாங்க மாட்டார்கள் என சமூக ஊடகங்களில் பற்றுச்சீட்டை பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.