• May 04 2024

ஆன்லைனில் சமோசா ஆர்டர்..! லட்ச கணக்கில் பறிபோன பணம்..!அதிர்ந்த வைத்தியர்..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 2:03 pm
image

Advertisement

ஆன்லைனில் சமோசா ஆர்டர் செய்த வைத்தியர் ஒருவரிடம் இருந்து லட்ச கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEM மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயதான வைத்தியரிடம் இருந்தே இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர், சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவரின் நண்பர்கள் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக பிரபலமான உணவகம் ஒன்றில் 25 பிளேட் சமோசாவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார்.

இந்நிலையில், ஆர்டர் எடுப்பதற்காக  தொலைபேசியில் பேசிய நபர், சமோசாவிற்கு 1500 ரூபாய் முற்பணமாக கேட்டுள்ளார்.

அத்துடன், அந்த நபர் பணத்தை செலுத்துவதற்குரிய  வங்கிகணக்கின் விபரத்தையும்  குறித்த மருத்துவரின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து வைத்தியர் அதற்கு 1500 ரூபாயை பரிவர்த்தனை செய்துள்ளார்.

மறுபக்கம் அந்த நபர்,  பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை ஐடியை  உருவாக்க கோரியமையால் அதனை நம்பிய மருத்துவரும்  அவர் கூறியது போன்று தனது போனில் செய்து கொண்டிருக்கும் போது  திடீரென 28.807 ரூபாய் காணாமல் போய்யுள்ளது.

அதனை தொடர்ந்து மொத்த தொகையான 1.40 லட்சமும் பறிபோனமையால் பாதிக்கப்பட்ட வைத்தியர் அருகிலுள்ள  காவல்  நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்கு பதிவு செய்த பொலிஸார்  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைனில் சமோசா ஆர்டர். லட்ச கணக்கில் பறிபோன பணம்.அதிர்ந்த வைத்தியர்.samugammedia ஆன்லைனில் சமோசா ஆர்டர் செய்த வைத்தியர் ஒருவரிடம் இருந்து லட்ச கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEM மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயதான வைத்தியரிடம் இருந்தே இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர், சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவரின் நண்பர்கள் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக பிரபலமான உணவகம் ஒன்றில் 25 பிளேட் சமோசாவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார்.இந்நிலையில், ஆர்டர் எடுப்பதற்காக  தொலைபேசியில் பேசிய நபர், சமோசாவிற்கு 1500 ரூபாய் முற்பணமாக கேட்டுள்ளார். அத்துடன், அந்த நபர் பணத்தை செலுத்துவதற்குரிய  வங்கிகணக்கின் விபரத்தையும்  குறித்த மருத்துவரின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து வைத்தியர் அதற்கு 1500 ரூபாயை பரிவர்த்தனை செய்துள்ளார்.மறுபக்கம் அந்த நபர்,  பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை ஐடியை  உருவாக்க கோரியமையால் அதனை நம்பிய மருத்துவரும்  அவர் கூறியது போன்று தனது போனில் செய்து கொண்டிருக்கும் போது  திடீரென 28.807 ரூபாய் காணாமல் போய்யுள்ளது. அதனை தொடர்ந்து மொத்த தொகையான 1.40 லட்சமும் பறிபோனமையால் பாதிக்கப்பட்ட வைத்தியர் அருகிலுள்ள  காவல்  நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்கு பதிவு செய்த பொலிஸார்  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement