கடந்தவார இறுதியில் சிவனடிபாதமலைக்கு இரண்டு இலட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனர் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.எச்.வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
யாத்திரிகர்கள் வருகையால் வாகன தரிப்பிடங்கள் நிரம்பிய நிலையில் மேலதிக வாகனங்கள் நல்லதண்ணி மறே நெடுஞ்சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இரத்தினபுரி வழியாக அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தந்ததால் மலை உச்சியில் பாரிய இட நெருக்கடி ஏற்பட்டது.
இதன் காரணமாக நல்லதண்ணி வழியில் சென்று கொண்டிருந்த யாத்திரிகர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு வருகை தந்த அனைத்து யாத்திரிகர்களுக்கும் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்பட்டது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.எச.வீரசேகர தெரிவித்தார்.
கடந்தவார இறுதியில் சிவனடிபாதமலைக்கு இரண்டு இலட்சம் யாத்திரிகர்கள் வருகை கடந்தவார இறுதியில் சிவனடிபாதமலைக்கு இரண்டு இலட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனர் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.எச்.வீரசேகர தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,யாத்திரிகர்கள் வருகையால் வாகன தரிப்பிடங்கள் நிரம்பிய நிலையில் மேலதிக வாகனங்கள் நல்லதண்ணி மறே நெடுஞ்சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அத்துடன் இரத்தினபுரி வழியாக அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தந்ததால் மலை உச்சியில் பாரிய இட நெருக்கடி ஏற்பட்டது.இதன் காரணமாக நல்லதண்ணி வழியில் சென்று கொண்டிருந்த யாத்திரிகர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு வருகை தந்த அனைத்து யாத்திரிகர்களுக்கும் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்பட்டது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.எச.வீரசேகர தெரிவித்தார்.