சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தானது ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அந்த பிரதேசத்தில் உள்ள பாலம் ஒன்று , நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.
காலை நிலவரப்படி 11 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பபட்டுள்ளதாகவும் பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென இடிந்து விழுந்த சீனாவின் மேம்பாலம் - 11 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம் சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தானது ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அந்த பிரதேசத்தில் உள்ள பாலம் ஒன்று , நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.காலை நிலவரப்படி 11 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பபட்டுள்ளதாகவும் பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.