• Sep 08 2024

சுருக்கு வலை பிரச்சினைக்கு என்ன தீர்வு? - கேள்வி கேட்ட முல்லைத்தீவு மாவட்ட அதிகாரி - மௌனம் சாதித்த டக்ளஸ்

Tharun / Jul 20th 2024, 3:50 pm
image

Advertisement

சுருக்கு வலை பிரச்சினைக்கு என்ன தீர்வு என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கேட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சர் மௌனமாக இருந்துள்ளதாகவும்  வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழில்  இடம்பெற்றுள்ள ஊடக  சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தற்செயலாக இந்த சுருக்குவலைகள் மோசமான முறையில் தொடங்கியுள்ளது. சுருக்கு வலையின் படகுகள் கட்டைக்காட்டு மக்கள் ஆதங்கப்பட்டு கடல்படையினருடன் கதைத்த நிலையில் அதற்கு ஒரு முடிவும் சொல்லவில்லை என்று சொல்லி முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.

அதே போல மாத்தளை, முல்லைத்தீவு, கொக்கிளாய் சகல பிரதேசத்திலும் இன்று சுருக்கு வலைகள் மோசமான நிலையில் போகிறது. சூடையின் விலை 50 ரூபாவுக்கும்   எடுப்பதற்கு ஆட்கள் இல்லை. ஏனெனில் சுருக்கு வலையால் கொண்டு வரும் மீன்களை கண்ட காசுக்கும் கொடுக்கிறார்கள். அதனால் எங்களினுடைய மீனை விற்க முடியாமல் இருக்கிறது. அதனால் எங்களினுடைய தொழிலாளிகள் தொழிலுக்கு போகிறார்கள் இல்லை.

இன்னிலையில் திரும்பவும் கடல் முழுவதும் சுறுக்குவளையும் காணப்படுகிறது. 

இன்று முல்லைத்தீவில் ஒரு கூட்டம் இடம்பெற்றது அதில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அந்தக்கடலில் 500, 600 மீட்டருக்கு மேல் சுருக்கு வலையை போட்டு விட்டு இருக்கிறார்கள்.  அந்த  சுருக்கு வலையில்  பிடித்துக்கொண்டு மீனை எளிய விலைக்கு விற்கிறார்கள்.எங்களுடைய மக்கள் இந்த மண்ணெண்ணை விலையிலும் எண்ணெய் அடித்துக்கொண்டு போய் சூடையை பிடித்துக்கொண்டு அதனை 50 ரூபாய்க்கு விற்க முடியவில்லை. ஆனால் நாங்கள் 80 ரூபாய்க்கு ஒரு வடை வாங்கி சாப்பிடுகிறோம். அப்படி என்றால் என்னென்று கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்வது என கடல்தொழிலமைச்சரை பார்த்து கேட்டார். ஆனால் அதற்கு  கடற்றொழில் அமைச்சர் மௌனம் சாதித்துள்ளார். என அவர் தெரிவித்துள்ளார்.

சுருக்கு வலை பிரச்சினைக்கு என்ன தீர்வு - கேள்வி கேட்ட முல்லைத்தீவு மாவட்ட அதிகாரி - மௌனம் சாதித்த டக்ளஸ் சுருக்கு வலை பிரச்சினைக்கு என்ன தீர்வு என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கேட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சர் மௌனமாக இருந்துள்ளதாகவும்  வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழில்  இடம்பெற்றுள்ள ஊடக  சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்செயலாக இந்த சுருக்குவலைகள் மோசமான முறையில் தொடங்கியுள்ளது. சுருக்கு வலையின் படகுகள் கட்டைக்காட்டு மக்கள் ஆதங்கப்பட்டு கடல்படையினருடன் கதைத்த நிலையில் அதற்கு ஒரு முடிவும் சொல்லவில்லை என்று சொல்லி முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.அதே போல மாத்தளை, முல்லைத்தீவு, கொக்கிளாய் சகல பிரதேசத்திலும் இன்று சுருக்கு வலைகள் மோசமான நிலையில் போகிறது. சூடையின் விலை 50 ரூபாவுக்கும்   எடுப்பதற்கு ஆட்கள் இல்லை. ஏனெனில் சுருக்கு வலையால் கொண்டு வரும் மீன்களை கண்ட காசுக்கும் கொடுக்கிறார்கள். அதனால் எங்களினுடைய மீனை விற்க முடியாமல் இருக்கிறது. அதனால் எங்களினுடைய தொழிலாளிகள் தொழிலுக்கு போகிறார்கள் இல்லை.இன்னிலையில் திரும்பவும் கடல் முழுவதும் சுறுக்குவளையும் காணப்படுகிறது. இன்று முல்லைத்தீவில் ஒரு கூட்டம் இடம்பெற்றது அதில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அந்தக்கடலில் 500, 600 மீட்டருக்கு மேல் சுருக்கு வலையை போட்டு விட்டு இருக்கிறார்கள்.  அந்த  சுருக்கு வலையில்  பிடித்துக்கொண்டு மீனை எளிய விலைக்கு விற்கிறார்கள்.எங்களுடைய மக்கள் இந்த மண்ணெண்ணை விலையிலும் எண்ணெய் அடித்துக்கொண்டு போய் சூடையை பிடித்துக்கொண்டு அதனை 50 ரூபாய்க்கு விற்க முடியவில்லை. ஆனால் நாங்கள் 80 ரூபாய்க்கு ஒரு வடை வாங்கி சாப்பிடுகிறோம். அப்படி என்றால் என்னென்று கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்வது என கடல்தொழிலமைச்சரை பார்த்து கேட்டார். ஆனால் அதற்கு  கடற்றொழில் அமைச்சர் மௌனம் சாதித்துள்ளார். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement