• Dec 03 2024

நெல் வயல்களில் மடிச்சுக்கட்டி நோய்த் தாக்கம்; கிளி.பிரதி விவசாயப் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்..!

Sharmi / Dec 2nd 2024, 3:01 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் வயல்களில் கபிலநிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் விவசாய திணைக்கள அலுவலகத்தில் இன்று(02)   நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மடிச்சுக்கட்டி நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் குறித்த நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

புளியம்பொக்கணை, பளை, முரசுமோட்டை, பெரிய பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகள் விவசாய போதனாசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் நோயின் தாக்கத்தை  கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன், வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் சிறுதானியம், மரக்கறி செய்கைகளின் அழிவு விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும்  கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


நெல் வயல்களில் மடிச்சுக்கட்டி நோய்த் தாக்கம்; கிளி.பிரதி விவசாயப் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள். கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் வயல்களில் கபிலநிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிளிநொச்சியில் விவசாய திணைக்கள அலுவலகத்தில் இன்று(02)   நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மடிச்சுக்கட்டி நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் குறித்த நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. புளியம்பொக்கணை, பளை, முரசுமோட்டை, பெரிய பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் விவசாய போதனாசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் நோயின் தாக்கத்தை  கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.அத்துடன், வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் சிறுதானியம், மரக்கறி செய்கைகளின் அழிவு விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும்  கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement