• May 19 2024

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு சொந்தமானது பத்ம பூஷன் விருது!!

crownson / Dec 3rd 2022, 11:41 am
image

Advertisement

கலை, அரசியல், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளைப் படைத்து சமூகத்தில் மதிப்பிற்குரியவராக திகழ்பவர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகள் இதுவாகும்.

இதில், பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

இதில், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனைகளைப் புரிந்ததற்காக தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு அறிவித்தது.

இந்த பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.

இந்நிலையில், சுந்தர் பிச்சை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசிப்பதால் அவருக்கு இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் வழங்கினார்.

விருதை பெற்றுக்கொண்ட சுந்தர் பிச்சை, இந்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பாக சுந்தர் பிச்சை கூறியதாவது, இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி.

என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி.இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன்.

நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது. எனவே, கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகும். எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளது' என்றும் கூறியுள்ளார்.

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு சொந்தமானது பத்ம பூஷன் விருது கலை, அரசியல், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளைப் படைத்து சமூகத்தில் மதிப்பிற்குரியவராக திகழ்பவர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகள் இதுவாகும். இதில், பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதில், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனைகளைப் புரிந்ததற்காக தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு அறிவித்தது.இந்த பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். இந்நிலையில், சுந்தர் பிச்சை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசிப்பதால் அவருக்கு இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட சுந்தர் பிச்சை, இந்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இது தொடர்பாக சுந்தர் பிச்சை கூறியதாவது, இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி.இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன்.நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது. எனவே, கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகும். எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளது' என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement