• May 22 2024

எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் : பாகிஸ்தான் கடும் கண்டனம்! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 6:38 am
image

Advertisement

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் எல்லையை தீவிரவாத தாக்குதல்களுக்கு தளமாக பயன்படுத்தக்கூடாது என அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

அண்மையில் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த மோடி, அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்தார்.

இரு தலைவர்களும் பாகிஸ்தானின் எல்லையை தீவிரவாத தாக்குதல்களுக்கு தளமாக பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தனர்.

 இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் காஷ்மீர் சூழ்நிலையில் இருந்து திசைதிருப்ப இஸ்லாமாபாத்திற்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுகளை இந்தியா பயன்படுத்துகிறது என கடுமையாக சாடியுள்ளது.

அத்துடன்  அமெரிக்க-இந்திய கூட்டு அறிக்கை “அவசியமற்றது எனவும், ஒருதலைப்பட்சமானது மற்றும் தவறானது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.

கூட்டறிக்கையால் ஆச்சரியமடைந்ததாக கூறிய அமைச்சகம், அமெரிக்காவுடன் “நெருக்கமான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு” இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் : பாகிஸ்தான் கடும் கண்டனம் samugammedia இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் எல்லையை தீவிரவாத தாக்குதல்களுக்கு தளமாக பயன்படுத்தக்கூடாது என அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.அண்மையில் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த மோடி, அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்தார்.இரு தலைவர்களும் பாகிஸ்தானின் எல்லையை தீவிரவாத தாக்குதல்களுக்கு தளமாக பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் காஷ்மீர் சூழ்நிலையில் இருந்து திசைதிருப்ப இஸ்லாமாபாத்திற்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுகளை இந்தியா பயன்படுத்துகிறது என கடுமையாக சாடியுள்ளது.அத்துடன்  அமெரிக்க-இந்திய கூட்டு அறிக்கை “அவசியமற்றது எனவும், ஒருதலைப்பட்சமானது மற்றும் தவறானது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.கூட்டறிக்கையால் ஆச்சரியமடைந்ததாக கூறிய அமைச்சகம், அமெரிக்காவுடன் “நெருக்கமான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு” இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement