அக்குரஸ்ஸ, பகுதியில் உள்ள நில்வளா ஆற்றில், மனிதனின் கால் பாதம் ஒன்று மிதந்து வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
நில்வளா ஆற்றில் , மனிதனின் கால் பாதம் ஒன்று மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில். வெலிஹேன பிரதேசத்தில் 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக நேற்றையதினம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில் அதுதொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மனித காலை மீட்டு அகுரஸ்ஸ திடீர் மரண விசாரணை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்
இது ஒரு கொலையாக இருக்குமா அல்லது முதலையின் தாக்குதலா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆற்றில் மிதந்து வந்த மனிதக் காலால் பதற்றம் - கொலையா விபத்தாபொலிஸார் தீவிர விசாரணை அக்குரஸ்ஸ, பகுதியில் உள்ள நில்வளா ஆற்றில், மனிதனின் கால் பாதம் ஒன்று மிதந்து வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுநில்வளா ஆற்றில் , மனிதனின் கால் பாதம் ஒன்று மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில். வெலிஹேன பிரதேசத்தில் 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக நேற்றையதினம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில் அதுதொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸார் மனித காலை மீட்டு அகுரஸ்ஸ திடீர் மரண விசாரணை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் இது ஒரு கொலையாக இருக்குமா அல்லது முதலையின் தாக்குதலா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.