• May 21 2024

Chithra / Nov 21st 2023, 2:40 pm
image

Advertisement


முல்லைத்தீவு  முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21.11.2023) காலை 11.30 மணியளவில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் ஞனதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த இரண்டு மாவீரர்களின் பெற்றோரான மேரிதிரேசா, செந்தாமரை அம்மா ஆகியோரினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர்களான க.விஜிந்தன், க.தவராசா, பிரதேச சபையின் உறுப்பினர் த.அமலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதேவேளை  மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், மாவீரர்களின் நினைவு படத்திற்கு விளக்கேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது.

தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.


மேலும் யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் கிராமத்தில் உள்ள மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கோரவிப்பு நிகழ்வு இன்று காலை 9:30. மணியளவில் கிராம மக்கள் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் முதல் நிகழ்வாக மாவீரர்கள் திரு உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மௌனவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மாவீர்கள் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு. samugammedia முல்லைத்தீவு  முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21.11.2023) காலை 11.30 மணியளவில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் ஞனதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த இரண்டு மாவீரர்களின் பெற்றோரான மேரிதிரேசா, செந்தாமரை அம்மா ஆகியோரினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர்களான க.விஜிந்தன், க.தவராசா, பிரதேச சபையின் உறுப்பினர் த.அமலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதேவேளை  மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது.கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில், மாவீரர்களின் நினைவு படத்திற்கு விளக்கேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது.தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.மேலும் யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் கிராமத்தில் உள்ள மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கோரவிப்பு நிகழ்வு இன்று காலை 9:30. மணியளவில் கிராம மக்கள் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில் முதல் நிகழ்வாக மாவீரர்கள் திரு உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மௌனவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலிக்கப்பட்டனர்.அதனை தொடர்ந்து மாவீர்கள் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement