• May 04 2024

இலங்கையில் தடம் பதிக்கும் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்..! என்னென்ன வசதிகள் தெரியுமா? samugammedia

Chithra / Nov 21st 2023, 2:18 pm
image

Advertisement

உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவற்றில் சிறிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதிகள், கஃபே, ஏடிஎம், உணவு விடுதிகள் இருக்கும் என்றும் இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறந்து பெட்ரோலிய விநியோக நடவடிக்கைகளை குறித்த நிறுவனம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனமும் ஷெல் நிறுவனமும் இணைந்து இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தடம் பதிக்கும் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம். என்னென்ன வசதிகள் தெரியுமா samugammedia உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது.மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது.மேலும் அவற்றில் சிறிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதிகள், கஃபே, ஏடிஎம், உணவு விடுதிகள் இருக்கும் என்றும் இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறந்து பெட்ரோலிய விநியோக நடவடிக்கைகளை குறித்த நிறுவனம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனமும் ஷெல் நிறுவனமும் இணைந்து இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement