• Apr 28 2024

கட்சி மோதல் தீவிரம்...! மைத்திரிக்கு எதிராக தயாசிறி அதிரடி நடவடிக்கை...!samugammedia

Sharmi / Sep 7th 2023, 10:22 am
image

Advertisement

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர நேற்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் தயாசிறி ஜயசேகரவிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்து.

இந்நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க , கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, நேற்று பிற்பகல் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக வழக்கை தாக்கல் செய்தார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

அதேவேளை, சுதந்திரக் கட்சியின் தலைமையகம் நேற்றையதினம் திடீரென மூடப்பட்டதுடன் அதன் வாயில் கதவும் பூட்டுப் போட்டு மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த கட்சிக்குள் அரசியல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


கட்சி மோதல் தீவிரம். மைத்திரிக்கு எதிராக தயாசிறி அதிரடி நடவடிக்கை.samugammedia ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர நேற்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் தயாசிறி ஜயசேகரவிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்து.இந்நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க , கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, நேற்று பிற்பகல் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக வழக்கை தாக்கல் செய்தார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  அதேவேளை, சுதந்திரக் கட்சியின் தலைமையகம் நேற்றையதினம் திடீரென மூடப்பட்டதுடன் அதன் வாயில் கதவும் பூட்டுப் போட்டு மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த கட்சிக்குள் அரசியல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement