யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பலர் வருகை தந்தமையை அவதானிக்க முடிந்தது.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம்(13) இடம்பெற்ற மாவட்ட கலந்துரையாடலின் போது இவ்வாறான நிலை காணப்பட்டது.
குறித்த கூட்டமானது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலாவது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அக் கட்சியை சேர்ந்த பல ஆதரவாளர்கள் உள்வாங்கப்பட்டனர்.
கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்களில் கட்சி ஆதரவாளர்கள் உள்ள்வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போதும் இவ்வாறான நிலை காணப்படுகிறது.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளராக பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் பிரசன்னம் ;கட்டுப்படுத்தாத செயலாளர். யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பலர் வருகை தந்தமையை அவதானிக்க முடிந்தது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம்(13) இடம்பெற்ற மாவட்ட கலந்துரையாடலின் போது இவ்வாறான நிலை காணப்பட்டது.குறித்த கூட்டமானது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலாவது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அக் கட்சியை சேர்ந்த பல ஆதரவாளர்கள் உள்வாங்கப்பட்டனர். கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்களில் கட்சி ஆதரவாளர்கள் உள்ள்வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போதும் இவ்வாறான நிலை காணப்படுகிறது.யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளராக பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.