• Jun 18 2024

இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது பருத்தித்துறை பிரதேச செயலக அணி! samugammedia

Tamil nila / Sep 28th 2023, 6:42 am
image

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக உதைப்பந்தாட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

யாழ். மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நடப்பாண்டுக்கான இந்தப் போட்டித் தொடர் கடந்த இரு நாட்களாக வேலணை துறையூர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அணிகள் என மொத்தம் 15 அணிகள் பங்குபற்றியிருந்தன.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் சாவகச்சேரி பிரதேச செயலக அணியை 3:0 என்ற அடிப்படையிலும், மாவட்ட செயலக அணியை 1:0 என்ற அடிப்படையிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்குப் பருத்தித்துறை பிரதேச செயலக அணி முன்னேறியிருந்தது.

நேற்று அரையிறுதிப் போட்டியில் காரைநகர் பிரதேச செயலக அணியை 2:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு  பருத்தித்துறை பிரதேச செயலக அணி முன்னேறியுள்ளது. இந்த அணி இறுதிப் போட்டியில் வேலணை பிரதேச செயலக அணியுடன் மோதவுள்ளது.

இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது பருத்தித்துறை பிரதேச செயலக அணி samugammedia யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக உதைப்பந்தாட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.யாழ். மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நடப்பாண்டுக்கான இந்தப் போட்டித் தொடர் கடந்த இரு நாட்களாக வேலணை துறையூர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அணிகள் என மொத்தம் 15 அணிகள் பங்குபற்றியிருந்தன.நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் சாவகச்சேரி பிரதேச செயலக அணியை 3:0 என்ற அடிப்படையிலும், மாவட்ட செயலக அணியை 1:0 என்ற அடிப்படையிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்குப் பருத்தித்துறை பிரதேச செயலக அணி முன்னேறியிருந்தது.நேற்று அரையிறுதிப் போட்டியில் காரைநகர் பிரதேச செயலக அணியை 2:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு  பருத்தித்துறை பிரதேச செயலக அணி முன்னேறியுள்ளது. இந்த அணி இறுதிப் போட்டியில் வேலணை பிரதேச செயலக அணியுடன் மோதவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement