• Nov 26 2024

குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவை - வடதாரகை படகு தொடர்பில் கடற்படையின் அறிவிப்பு

Chithra / Feb 1st 2024, 10:15 am
image


 

யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் ‘வடதாரகை படகினை  திருத்தம் செய்வதற்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என கடற்படை தெரிவித்துள்ளது.

கச்சதீவு திருவிழாவிற்கு முன்னர் வடதாரகை படகினை திருத்தம் செய்யமாறு, யாழ்.மாவட்ட செயலர் அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து  வடதாரகை படகின் திருத்த வேலைக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட கடற்படையினர், திருத்த பணிகளுக்காக 32 இலட்ச ரூபாய்  செலவாகும் எனவும்,  

பழுதுகள் காணப்பட்டால், அவற்றினை திருத்தம் செய்வதற்கு மேலதிக பணம் தேவைப்படும் எனவும்  வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறிகாட்டுவான் நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் குமுதினி படகு இன்றைய தினம்(01) முதல் சேவையில் ஈடுபடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இப் படகின் திருத்த வேலைக்காக 75 ஆயிரம் ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவை - வடதாரகை படகு தொடர்பில் கடற்படையின் அறிவிப்பு  யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் ‘வடதாரகை படகினை  திருத்தம் செய்வதற்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என கடற்படை தெரிவித்துள்ளது.கச்சதீவு திருவிழாவிற்கு முன்னர் வடதாரகை படகினை திருத்தம் செய்யமாறு, யாழ்.மாவட்ட செயலர் அறிவுறுத்தியிருந்தார்.இதனையடுத்து  வடதாரகை படகின் திருத்த வேலைக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட கடற்படையினர், திருத்த பணிகளுக்காக 32 இலட்ச ரூபாய்  செலவாகும் எனவும்,  பழுதுகள் காணப்பட்டால், அவற்றினை திருத்தம் செய்வதற்கு மேலதிக பணம் தேவைப்படும் எனவும்  வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குறிகாட்டுவான் நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் குமுதினி படகு இன்றைய தினம்(01) முதல் சேவையில் ஈடுபடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இப் படகின் திருத்த வேலைக்காக 75 ஆயிரம் ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement