• Nov 22 2024

பணி பகிஷ்கரிப்பில் குதித்த சுகாதார துறையினர்...! நோயாளர்கள் அவதி...!samugammedia

Sharmi / Feb 1st 2024, 10:02 am
image

மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார துறையினர் இன்று வியாழக்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததை காணமுடிந்தது.

மூதூர் தள வைத்தியசாலையில் வைத்தியர்கள் மாத்திரம் கடமை புரிந்த போதிலும் மருந்துகள் வழங்குவதற்கு எந்தவித ஊழியரும் இல்லாமையால் வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு,  போன்றன இயக்கமின்றி காணப்பட்டது.

அத்தோடு அவசர பிரிவு வழமைபோன்று இயங்கியது.

தொலை தூரத்திலிருந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்தியசாலைக்கு மருத்துவ சேவை பெறுவதற்காக வருகை தந்த பல நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் சேவை பெறாது திரும்பிச் சென்றனர்.   


திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு 

திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள் ,ஊழியர்கள், மருந்தாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (01) பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பளம் அதிகரிப்பு, ஊழியர் பற்றாக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் மிகவும் அவதியுற்று வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.


புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு 

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துனை மருத்துவர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்று காலை முதல் பணிபகிஷகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 

அந்த வகையில் கிளினிக் நோயாளர் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க சேவைப் பிரிவு ஆகியன மூடிய நிலையில் காட்சியளிக்கின்றன. 

இதனால் தூரப்பகுதியிலிருந்து வருகத் தரும் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகிய நிலையில் திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.






பணி பகிஷ்கரிப்பில் குதித்த சுகாதார துறையினர். நோயாளர்கள் அவதி.samugammedia மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார துறையினர் இன்று வியாழக்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததை காணமுடிந்தது.மூதூர் தள வைத்தியசாலையில் வைத்தியர்கள் மாத்திரம் கடமை புரிந்த போதிலும் மருந்துகள் வழங்குவதற்கு எந்தவித ஊழியரும் இல்லாமையால் வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு,  போன்றன இயக்கமின்றி காணப்பட்டது.அத்தோடு அவசர பிரிவு வழமைபோன்று இயங்கியது.தொலை தூரத்திலிருந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்தியசாலைக்கு மருத்துவ சேவை பெறுவதற்காக வருகை தந்த பல நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் சேவை பெறாது திரும்பிச் சென்றனர்.   திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள் ,ஊழியர்கள், மருந்தாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (01) பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பளம் அதிகரிப்பு, ஊழியர் பற்றாக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் மிகவும் அவதியுற்று வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துனை மருத்துவர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்று காலை முதல் பணிபகிஷகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிளினிக் நோயாளர் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க சேவைப் பிரிவு ஆகியன மூடிய நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் தூரப்பகுதியிலிருந்து வருகத் தரும் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகிய நிலையில் திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement