• Nov 06 2024

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- விஜித ஹேரத்!

Tamil nila / Sep 25th 2024, 6:49 pm
image

Advertisement

இலங்கையில் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை ஒக்டோபர் 15-20க்குள் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்,

எனினும் ஒக்டோபர் இறுதிக்குள் புதிய கடவுச்சீட்டுகள் வந்து சேரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஏற்கனவே ஓகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் உரியத் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 அல்லது 16ஆம் திகதிக்குள் இந்த வரிசைகளை இல்லாமல் செய்ய முடியும் எனவும் புதிய கடவுச்சீட்டு முறைமையை அறிமுகப்படுத்த முடியும் எனவும் எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று தற்போது ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- விஜித ஹேரத் இலங்கையில் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை ஒக்டோபர் 15-20க்குள் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்,எனினும் ஒக்டோபர் இறுதிக்குள் புதிய கடவுச்சீட்டுகள் வந்து சேரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஏற்கனவே ஓகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது.பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் உரியத் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 அல்லது 16ஆம் திகதிக்குள் இந்த வரிசைகளை இல்லாமல் செய்ய முடியும் எனவும் புதிய கடவுச்சீட்டு முறைமையை அறிமுகப்படுத்த முடியும் எனவும் எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.குறித்த காலப்பகுதிக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.அதே போன்று தற்போது ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement