• May 02 2024

பாத்தீனியம் எங்கள் மண்ணில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய பகாசுர களை! - ஐங்கரநேசன்

Chithra / Dec 4th 2022, 3:55 pm
image

Advertisement

யாழில் இன்றைய தினம் சிறகுகள் அமைப்பு ஏற்பாடு செய்த அனைத்துலக மண் தினம் பற்றிய கலந்துரையாடலும், பாத்தீனியம் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் அங்குராப்பணம் செய்யும் கலந்துரையாடலானது பலாலி வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில்  இடம்பெற்றது.

இது தொடர்பாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்ததாவது,

டிசம்பர் 5 ஆம் திகதி உலக மண் தினம் சர்வதேச அளவில் கடைப்பிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு எழுதிரளில் பாத்தீனியம் ஒழிப்பு சம்மந்தமான ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.

பாத்தீனியம் எங்கள் மண்ணில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய பகாசுர களை. களை என்று இதனை சின்ன சொற்களுக்குள் அடக்கி விட முடியாது. அந்தளவிற்கு இதனுடைய தாக்கங்கள் இயற்கை சமநிலை, உயிர்ப்பல்வகை, விவசாயம், தேக ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இதனை அழிப்பது தொடர்பாக இன்று பாத்தீனிய ஒழிப்பு இயக்கத்திற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. இதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் தமிழ் தேசிய பசுமை இயக்கமும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க தயாராக உள்ளது. என்றார்.

பாத்தீனியம் எங்கள் மண்ணில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய பகாசுர களை - ஐங்கரநேசன் யாழில் இன்றைய தினம் சிறகுகள் அமைப்பு ஏற்பாடு செய்த அனைத்துலக மண் தினம் பற்றிய கலந்துரையாடலும், பாத்தீனியம் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் அங்குராப்பணம் செய்யும் கலந்துரையாடலானது பலாலி வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில்  இடம்பெற்றது.இது தொடர்பாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.அவர் தெரிவித்ததாவது,டிசம்பர் 5 ஆம் திகதி உலக மண் தினம் சர்வதேச அளவில் கடைப்பிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு எழுதிரளில் பாத்தீனியம் ஒழிப்பு சம்மந்தமான ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.பாத்தீனியம் எங்கள் மண்ணில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய பகாசுர களை. களை என்று இதனை சின்ன சொற்களுக்குள் அடக்கி விட முடியாது. அந்தளவிற்கு இதனுடைய தாக்கங்கள் இயற்கை சமநிலை, உயிர்ப்பல்வகை, விவசாயம், தேக ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.இதனை அழிப்பது தொடர்பாக இன்று பாத்தீனிய ஒழிப்பு இயக்கத்திற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. இதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் தமிழ் தேசிய பசுமை இயக்கமும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க தயாராக உள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement