• Nov 28 2024

வெருகலில் சீரற்ற கால நிலையால் மக்கள் பாதிப்பு...!samugammedia

Anaath / Jan 2nd 2024, 11:00 am
image

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்துடனான கடும் மழையினால் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக வெருகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள வட்டவான், சேனையூர் மற்றும் மாவடிச்சேனை ஆகிய கிராமங்களில் மக்களின் குடியிருப்புகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதன் காரணமாக இன்று (02) வரை சுமார் 229 குடும்பங்களை சேர்ந்த 642 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுள் சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி இந்துமகா வித்தியாலயத்தின் இடைத் தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வெருகல் பிரதேச செயலாரர் எம்.ஏ. அனஸின்  திட்டமிடலுக்கு  அமைய கிராம சேவகர்களாலும், பிரதேச செயலக அலுவலர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெருகல் பிரதேச சபை மற்றும் சமூகமட்ட அமைப்புகள் என்பன இணைந்து செயற்பட்டு வருகின்றன. 

மேலும் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்தும் கணிசமான அளவு உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 தொடர்ச்சியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் நலன்கருதி பாதிக்கப்பட்டவர்களுக்கான மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

வெருகலில் சீரற்ற கால நிலையால் மக்கள் பாதிப்பு.samugammedia கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்துடனான கடும் மழையினால் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெருகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள வட்டவான், சேனையூர் மற்றும் மாவடிச்சேனை ஆகிய கிராமங்களில் மக்களின் குடியிருப்புகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதன் காரணமாக இன்று (02) வரை சுமார் 229 குடும்பங்களை சேர்ந்த 642 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுள் சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி இந்துமகா வித்தியாலயத்தின் இடைத் தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெருகல் பிரதேச செயலாரர் எம்.ஏ. அனஸின்  திட்டமிடலுக்கு  அமைய கிராம சேவகர்களாலும், பிரதேச செயலக அலுவலர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெருகல் பிரதேச சபை மற்றும் சமூகமட்ட அமைப்புகள் என்பன இணைந்து செயற்பட்டு வருகின்றன. மேலும் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்தும் கணிசமான அளவு உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் நலன்கருதி பாதிக்கப்பட்டவர்களுக்கான மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement