• Nov 26 2024

வீதிகளில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!

Tharun / May 17th 2024, 6:07 pm
image

அராலி - யாழ்ப்பாணம் வீதியில் நாவாந்துறைக்கு அண்மித்த பகுதி, பொம்மைவெளி, காக்கைதீவு ஆகிய பகுதிகளில் வீதியோரங்களில் கழிவுப் பொருட்களை மக்கள் வீசிவிட்டு செல்வதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் குறித்த பகுதிகள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றது.


குறித்த பகுதியில் இன்றையதினம் ஏராளமான எலும்புகளும், கழிவுப் பொருட்களும் கொட்டப்பட்டுள்ளன. இருப்பினும் யாழ்ப்பாண மாநகரசபையோ அல்லது சுகாதார பரிசோதகர்களோ அந்த இடத்தினை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை.


அண்மைய நாட்களாக மழையுடனான காலநிலை காணப்படுகின்றது. இதனால் அங்கு இருக்கின்ற கொள்கலன்களிலும், பொலுத்தீன் பைகளிலும் நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுகிறது. பொது சுகாதார பரிசோதகர்கள் இதனை பார்த்தும் பார்க்காதது போல் செல்கின்றனர்.


இந்த பகுதிகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதிகளில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம் அராலி - யாழ்ப்பாணம் வீதியில் நாவாந்துறைக்கு அண்மித்த பகுதி, பொம்மைவெளி, காக்கைதீவு ஆகிய பகுதிகளில் வீதியோரங்களில் கழிவுப் பொருட்களை மக்கள் வீசிவிட்டு செல்வதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் குறித்த பகுதிகள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றது.குறித்த பகுதியில் இன்றையதினம் ஏராளமான எலும்புகளும், கழிவுப் பொருட்களும் கொட்டப்பட்டுள்ளன. இருப்பினும் யாழ்ப்பாண மாநகரசபையோ அல்லது சுகாதார பரிசோதகர்களோ அந்த இடத்தினை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை.அண்மைய நாட்களாக மழையுடனான காலநிலை காணப்படுகின்றது. இதனால் அங்கு இருக்கின்ற கொள்கலன்களிலும், பொலுத்தீன் பைகளிலும் நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுகிறது. பொது சுகாதார பரிசோதகர்கள் இதனை பார்த்தும் பார்க்காதது போல் செல்கின்றனர்.இந்த பகுதிகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement