உலகின் புகழ்பெற்ற வணிகப் பயணியான மார்க்கோ போலோவின் 7-வது நினைவு நூற்றாண்டை அவர் பிறந்த இத்தாலி நாட்டின் மிதக்கும் மாநகரான வெனிஸ் நகர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மார்க்கோ போலோ என்பவர் பாண்டியர்கள் பற்றியும் தென் இந்தியா, இலங்கை நாடுகள் பற்றியும் மிக முக்கியமான (பயண) வரலாற்றுத் தகவல்களைத் தம் நூலில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்ணின் மகனாகப் பெருமை பெற்ற மார்க்கோ போலோவைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய நினைவு ஏழாம் நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள் வெனிஸ் மாநகர மக்கள்.
தொடக்க விழாவின்போது, பார்வையாளர்களில் ஒருவர், மார்க்கோ போலோவைப் போன்றே வேஷமிட்டு, விழாக் கால பாத்திரம் போல முகமூடியணிந்துகொண்டு வந்ததுடன், மார்க்கோ போலோவின் பயணங்கள் நூலையும் ஏந்தியிருந்தார்.
வெனிஸ் நகரில் ஒரு வணிகக் குடும்பத்தில் 1254 ஆம் ஆண்டில் பிறந்து, கால் நூற்றாண்டு காலம் வரை வணிகப் பயணம் மேற்கொண்டு, 1324 ஆம் ஆண்டில் மறைந்த மார்க்கோ போலோ, பட்டுத் தடத்தைக் கண்டுபிடித்தவர்.
இந்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுடன், 13-வது நூற்றாண்டில் ஆசிய நாடுகளில் மார்க்கோ போலோ மேற்கொண்ட பயணம் தொடர்பான பிரம்மாண்டமான கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
புகழ்பெற்ற மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற தனது நூலில் அவர் தாம் சுற்றுப்பயணம் செய்த ஆசிய நாடுகள் பற்றி, அவற்றின் பண்பாடு, புவியியல், மக்கள் என, ஏராளமான தகவல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இதே வேளை வெனிஸ் மாநகர அரண்மனைகளில் ஒன்றின் சுவரில், தொலைதூர ஆசிய நாடுகளில் பயணம் செய்து, அவற்றைப் பற்றிய பதிவுகளைக் குறித்துள்ள மார்க்கோ போலோவின் இல்லங்கள் என்றெழுதப்பட்ட சலவைக் கல் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெனிஸ் நகரில் மார்க்கோ போலோவின் நினைவு நாளை கொண்டாடும் மக்கள்.samugammedia உலகின் புகழ்பெற்ற வணிகப் பயணியான மார்க்கோ போலோவின் 7-வது நினைவு நூற்றாண்டை அவர் பிறந்த இத்தாலி நாட்டின் மிதக்கும் மாநகரான வெனிஸ் நகர் மக்கள் கொண்டாடி வருகின்றனர். மார்க்கோ போலோ என்பவர் பாண்டியர்கள் பற்றியும் தென் இந்தியா, இலங்கை நாடுகள் பற்றியும் மிக முக்கியமான (பயண) வரலாற்றுத் தகவல்களைத் தம் நூலில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணின் மகனாகப் பெருமை பெற்ற மார்க்கோ போலோவைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய நினைவு ஏழாம் நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள் வெனிஸ் மாநகர மக்கள்.தொடக்க விழாவின்போது, பார்வையாளர்களில் ஒருவர், மார்க்கோ போலோவைப் போன்றே வேஷமிட்டு, விழாக் கால பாத்திரம் போல முகமூடியணிந்துகொண்டு வந்ததுடன், மார்க்கோ போலோவின் பயணங்கள் நூலையும் ஏந்தியிருந்தார்.வெனிஸ் நகரில் ஒரு வணிகக் குடும்பத்தில் 1254 ஆம் ஆண்டில் பிறந்து, கால் நூற்றாண்டு காலம் வரை வணிகப் பயணம் மேற்கொண்டு, 1324 ஆம் ஆண்டில் மறைந்த மார்க்கோ போலோ, பட்டுத் தடத்தைக் கண்டுபிடித்தவர்.இந்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுடன், 13-வது நூற்றாண்டில் ஆசிய நாடுகளில் மார்க்கோ போலோ மேற்கொண்ட பயணம் தொடர்பான பிரம்மாண்டமான கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்படுகிறது.புகழ்பெற்ற மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற தனது நூலில் அவர் தாம் சுற்றுப்பயணம் செய்த ஆசிய நாடுகள் பற்றி, அவற்றின் பண்பாடு, புவியியல், மக்கள் என, ஏராளமான தகவல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இதே வேளை வெனிஸ் மாநகர அரண்மனைகளில் ஒன்றின் சுவரில், தொலைதூர ஆசிய நாடுகளில் பயணம் செய்து, அவற்றைப் பற்றிய பதிவுகளைக் குறித்துள்ள மார்க்கோ போலோவின் இல்லங்கள் என்றெழுதப்பட்ட சலவைக் கல் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.