• Nov 25 2024

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என மக்கள் ஆதங்கம்- கஜதீபன் கவலை..!

Sharmi / Oct 23rd 2024, 8:56 am
image

ஒன்றுபட்ட தரப்பாக, ஒற்றுமையாக தமிழ் கட்சிகள் இல்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆனால் சங்கை சின்னமாகக் கொண்டிருக்கின்ற நாங்கள் மட்டுமே ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து இந்த தேர்தல் களத்தை காணுகின்றோம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கஜதீபன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தனில் நேற்றையதினம்(22) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின்பாக நடைபெறவிருக்கின்ற அரசியல் நிகழ்வுகளில், அரசியல் மாற்றங்களில் இந்த அணியுடன் கொள்கை அடிப்படையில் ஒத்து வேலை செய்யக்கூடிய அணியினரையும் ஒன்று திரட்டி, ஒரு பெரிய அளவிலான கட்டமைப்பை உருவாக்கி நாங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கின்றது. 

இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய சந்தை வியாபாரிகள் தமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான பிரச்சனைகளை எம்முடன் பகிர்ந்திருக்கின்றார்கள். 

கடந்த காலங்களில் இங்கு செயற்பட்டவர்களின் பலவீனமாகவே அது இருக்கின்றது. அந்த விடயங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என மக்கள் ஆதங்கம்- கஜதீபன் கவலை. ஒன்றுபட்ட தரப்பாக, ஒற்றுமையாக தமிழ் கட்சிகள் இல்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆனால் சங்கை சின்னமாகக் கொண்டிருக்கின்ற நாங்கள் மட்டுமே ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து இந்த தேர்தல் களத்தை காணுகின்றோம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கஜதீபன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி பரந்தனில் நேற்றையதினம்(22) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கு பின்பாக நடைபெறவிருக்கின்ற அரசியல் நிகழ்வுகளில், அரசியல் மாற்றங்களில் இந்த அணியுடன் கொள்கை அடிப்படையில் ஒத்து வேலை செய்யக்கூடிய அணியினரையும் ஒன்று திரட்டி, ஒரு பெரிய அளவிலான கட்டமைப்பை உருவாக்கி நாங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கின்றது. இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய சந்தை வியாபாரிகள் தமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான பிரச்சனைகளை எம்முடன் பகிர்ந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இங்கு செயற்பட்டவர்களின் பலவீனமாகவே அது இருக்கின்றது. அந்த விடயங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement