• May 05 2024

இலங்கையில் உணவு, பணம் கேட்டு எம்.பிக்களுக்கு மக்கள் தொலைபேசி அழைப்பு! SamugamMedia

Chithra / Feb 13th 2023, 9:42 pm
image

Advertisement

"மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள்." - இவ்வாறு எதிரணி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

"நாட்டின் பொருளாதார நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றது என்று அரச தரப்பு கூறி வருகின்ற போதிலும் நடைமுறையில் அப்படி எதையும் காணக்கூடியதாக இல்லை.

மக்கள் உணவுக்காக அலைவதை அறியக்கூடியதாக இருக்கின்றது. மக்கள் இப்போது அவர்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய எம்.பிக்களிடமே உணவு, பணம் ஆகியவற்றைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள். எம்.பிக்களிடமே உதவி கேட்கும் அளவுக்கு மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பதுதான் உண்மை.

அதுமட்டுமல்ல, மக்கள் சில எம்.பிக்களின் வீடுகளுக்குச் சென்றும் உணவு கேட்கின்றார்கள். கதவோரம் காத்துக்கிடக்கின்றார்கள்" - என்றும் எதிரணி எம்.பிக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உணவு, பணம் கேட்டு எம்.பிக்களுக்கு மக்கள் தொலைபேசி அழைப்பு SamugamMedia "மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள்." - இவ்வாறு எதிரணி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்."நாட்டின் பொருளாதார நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றது என்று அரச தரப்பு கூறி வருகின்ற போதிலும் நடைமுறையில் அப்படி எதையும் காணக்கூடியதாக இல்லை.மக்கள் உணவுக்காக அலைவதை அறியக்கூடியதாக இருக்கின்றது. மக்கள் இப்போது அவர்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய எம்.பிக்களிடமே உணவு, பணம் ஆகியவற்றைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள். எம்.பிக்களிடமே உதவி கேட்கும் அளவுக்கு மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பதுதான் உண்மை.அதுமட்டுமல்ல, மக்கள் சில எம்.பிக்களின் வீடுகளுக்குச் சென்றும் உணவு கேட்கின்றார்கள். கதவோரம் காத்துக்கிடக்கின்றார்கள்" - என்றும் எதிரணி எம்.பிக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement