தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்றையதினம்(22) மணல் அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர், தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது ஒப்பந்தத்தினை காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னாரில் மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள். தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்றையதினம்(22) மணல் அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்நிலையில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர், தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது ஒப்பந்தத்தினை காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.