• May 13 2024

முட்டையை தேடி அலையும் மக்கள் – ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு! samugammedia

Sharmi / Jun 15th 2023, 10:12 am
image

Advertisement

ஆஸ்திரேலியாவின் பல பெரிய பல்பொருள் அங்காடிகளில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முட்டை விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 சில வாரங்களுக்கு முன்னர் 4 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை பொதியின் விலை தற்போது 8 டொலர் முதல் 9 டொலர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 2025ஆம் ஆண்டுக்குள் பல்பொருள் அங்காடிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தீர்மானம் இதனை நேரடியாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறப்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகள் இடும் கூண்டில் அடைக்கப்பட்ட முட்டைகளை 2036ஆம் ஆண்டுக்குள் விற்க முடியாது என்று தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதே இதன் நோக்கம். இருப்பினும், ஆஸ்திரேலிய முட்டை உற்பத்தியாளர்கள் ஒரு புதிய முறையை நாடுவதற்கு இந்த நேரம் போதாது என்று வலியுறுத்துகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கூண்டு முட்டைகள் என்று கூறப்படுகிறது.

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் முட்டைகளில் 40 சதவீதம் அந்த முட்டைகள்தான் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது

முட்டையை தேடி அலையும் மக்கள் – ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு samugammedia ஆஸ்திரேலியாவின் பல பெரிய பல்பொருள் அங்காடிகளில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.முட்டை விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் 4 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை பொதியின் விலை தற்போது 8 டொலர் முதல் 9 டொலர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக 2025ஆம் ஆண்டுக்குள் பல்பொருள் அங்காடிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தீர்மானம் இதனை நேரடியாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிறப்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகள் இடும் கூண்டில் அடைக்கப்பட்ட முட்டைகளை 2036ஆம் ஆண்டுக்குள் விற்க முடியாது என்று தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதே இதன் நோக்கம். இருப்பினும், ஆஸ்திரேலிய முட்டை உற்பத்தியாளர்கள் ஒரு புதிய முறையை நாடுவதற்கு இந்த நேரம் போதாது என்று வலியுறுத்துகின்றனர்.ஆஸ்திரேலியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கூண்டு முட்டைகள் என்று கூறப்படுகிறது.பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் முட்டைகளில் 40 சதவீதம் அந்த முட்டைகள்தான் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement