அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக நாட்டு மக்கள் காணப்படுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக, தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்றையதினம்(07) கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் போராட்டத்தின் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து நாட்டு மக்கள் அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர்.
நாட்டு மக்களின் நம்பிக்கையினை காப்பாற்றுவதே ஆட்சியாளர்களின் பொறுப்பாக காணப்படுகின்றது.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியில் ஒற்றுமை காணப்படுகின்றது.
அரசியல் நோக்கத்திற்காக சந்தர்ப்பவாத உடன்படிக்கையாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. நாம் ஊழல் ஆட்சிக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.
ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதுடன் மக்களை மையப்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும்.
அதேவேளை, பதவி நிலைகளினால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியாது.
பதவி நிலைகளின் பொறுப்பினை சரிவர நிறைவேற்ற வேண்டும் அதுவே சிறந்த தலைமைத்துவமாகும் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள். ஊழல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப் புள்ளி. சஜித் திட்டவட்டம். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக நாட்டு மக்கள் காணப்படுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக, தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்றையதினம்(07) கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.மக்கள் போராட்டத்தின் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து நாட்டு மக்கள் அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர்.நாட்டு மக்களின் நம்பிக்கையினை காப்பாற்றுவதே ஆட்சியாளர்களின் பொறுப்பாக காணப்படுகின்றது.அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியில் ஒற்றுமை காணப்படுகின்றது.அரசியல் நோக்கத்திற்காக சந்தர்ப்பவாத உடன்படிக்கையாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. நாம் ஊழல் ஆட்சிக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதுடன் மக்களை மையப்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும். அதேவேளை, பதவி நிலைகளினால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியாது.பதவி நிலைகளின் பொறுப்பினை சரிவர நிறைவேற்ற வேண்டும் அதுவே சிறந்த தலைமைத்துவமாகும் எனவும் குறிப்பிட்டார்.