• Apr 28 2024

புட்டினுக்கு சிலை வைத்து அருகில் முட்டைகள் வைத்த மக்கள்:காரணம் இதுதான்!

Sharmi / Dec 19th 2022, 10:14 pm
image

Advertisement

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு எதிராக இங்கிலாந்தில் ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு வித்தியாசமான சிலை வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்யா பல மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. சர்வதேச நாடுகள் போர் வேண்டாம் எனக் கூறி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் விடாபிடியாக உள்ளார்.
 
தற்போது இந்த போர் 10 வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை உக்ரைன் ரஷ்ய தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் ரஷ்ய ஜனதிபதி  புதினை அவமானப்படுத்தும் விதமாகவும் உக்ரைன் ரஷ்ய போரினை எதிர்க்கும் வகையிலும் இங்கிலாந்தில் சர்ச்சைக்குரிய வகையில் புதினுக்கு சிலை அமைத்துள்ளனர்.
 
இங்கிலாந்தில் உள்ள பெல் எண்ட் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள புதின் சிலையின் தலை பகுதி ஆணுறுப்பு போன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சிலையின் அடி பாகத்தில் ‘Bellend of the Year’என எழுதப்பட்டுள்ளது. இதற்கு இந்த ஆண்டின் இழிவான நபர் என்று குறிப்பிட்டுருக்கின்றனர்.
 
அதோடு சிலை அருகே இலவசமாக முட்டை வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மக்கள் அதனை புதின் சிலையின் மீது வீசலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த சிலையினை நிறுவிய குழு கூறுகையில்,

சேதமாகும் புதின் சிலையின் மினியேச்சர் பதிப்புகள் ஏலத்தில் விற்கப்படும் என்றும் இதில் வரும் பணத்தை உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


புட்டினுக்கு சிலை வைத்து அருகில் முட்டைகள் வைத்த மக்கள்:காரணம் இதுதான் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு எதிராக இங்கிலாந்தில் ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு வித்தியாசமான சிலை வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா பல மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. சர்வதேச நாடுகள் போர் வேண்டாம் எனக் கூறி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் விடாபிடியாக உள்ளார். தற்போது இந்த போர் 10 வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை உக்ரைன் ரஷ்ய தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ரஷ்ய ஜனதிபதி  புதினை அவமானப்படுத்தும் விதமாகவும் உக்ரைன் ரஷ்ய போரினை எதிர்க்கும் வகையிலும் இங்கிலாந்தில் சர்ச்சைக்குரிய வகையில் புதினுக்கு சிலை அமைத்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பெல் எண்ட் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள புதின் சிலையின் தலை பகுதி ஆணுறுப்பு போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் அடி பாகத்தில் ‘Bellend of the Year’என எழுதப்பட்டுள்ளது. இதற்கு இந்த ஆண்டின் இழிவான நபர் என்று குறிப்பிட்டுருக்கின்றனர். அதோடு சிலை அருகே இலவசமாக முட்டை வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மக்கள் அதனை புதின் சிலையின் மீது வீசலாம் எனக் கூறப்பட்டுள்ளது.இது குறித்து இந்த சிலையினை நிறுவிய குழு கூறுகையில்,சேதமாகும் புதின் சிலையின் மினியேச்சர் பதிப்புகள் ஏலத்தில் விற்கப்படும் என்றும் இதில் வரும் பணத்தை உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement