"நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நான்தான். இது கட்சி எடுத்த ஒருமித்த முடிவு. இதில் எவ்வித மாற்றமும் வராது. நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக ஆளும் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள்." என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
குறித்த தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்கின்றேன். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகி வருகின்றோம். ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே பயணம் தொடரும். முற்போக்கு சக்திகள் எம்முடன் கைகோர்க்கலாம்." - எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்கும் - சஜித் நம்பிக்கை "நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நான்தான். இது கட்சி எடுத்த ஒருமித்த முடிவு. இதில் எவ்வித மாற்றமும் வராது. நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக ஆளும் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள்." என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார் குறித்த தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்கின்றேன். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகி வருகின்றோம். ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே பயணம் தொடரும். முற்போக்கு சக்திகள் எம்முடன் கைகோர்க்கலாம்." - எனவும் அவர் தெரிவித்துள்ளார்.