நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான யாசகர்கள் கொழும்புக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையில் உள்ள 65 நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் அண்மையில் நடத்தப்பட்ட யாசகர்கள் தொடர்பான ஆய்வில் அந்த பிரதேசங்களில் இருந்து 1003 யாசகர்கள் கொழும்புவந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் மாத்திரம் ஆயிரத்து 618 யாசகர்கள் உள்ளதாகவும் கடந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் சில தூய்மைப்படுத்தும் நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றில் பணி புரிந்தவர்களில் சிலரும் யாசகர்களாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கொழும்பில் வீதி சமிக்ஞை விளக்குகள் இருக்கும் இடங்களில் யாசகம் பெறுவோரில் பெரும்பாலானோர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
யாசகர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்காக ரிதிகமவில் நிறுவப்பட்டுள்ள புனர்வாழ்வு மையத்தில் 500க்கும் மேற்பட்ட யாசகர்கள் இருந்து வருகின்றனர்.
அதன் நிர்வாகம் தென் மாகாண சபையிடம் இருந்து வருவதுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பை நோக்கி படையெடுக்கும் யாசகர்கள். வெளியான காரணம்.samugammedia நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான யாசகர்கள் கொழும்புக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கையில் உள்ள 65 நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் அண்மையில் நடத்தப்பட்ட யாசகர்கள் தொடர்பான ஆய்வில் அந்த பிரதேசங்களில் இருந்து 1003 யாசகர்கள் கொழும்புவந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.குறிப்பாக மேல் மாகாணத்தில் மாத்திரம் ஆயிரத்து 618 யாசகர்கள் உள்ளதாகவும் கடந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் சில தூய்மைப்படுத்தும் நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றில் பணி புரிந்தவர்களில் சிலரும் யாசகர்களாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை கொழும்பில் வீதி சமிக்ஞை விளக்குகள் இருக்கும் இடங்களில் யாசகம் பெறுவோரில் பெரும்பாலானோர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.யாசகர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்காக ரிதிகமவில் நிறுவப்பட்டுள்ள புனர்வாழ்வு மையத்தில் 500க்கும் மேற்பட்ட யாசகர்கள் இருந்து வருகின்றனர்.அதன் நிர்வாகம் தென் மாகாண சபையிடம் இருந்து வருவதுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.