• Apr 13 2025

மட்டக்களப்பில் பிள்ளையான் கைது: வெளியான காரணம்..!

Sharmi / Apr 9th 2025, 10:42 am
image

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு(CID) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலளத்தில் வைத்து நேற்று(08) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி  உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக CIDயினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இது தொடர்பில் பிள்ளையானை மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நேற்று இரவு 8.00 மணிக்கு கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பிள்ளையான் கைது: வெளியான காரணம். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு(CID) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலளத்தில் வைத்து நேற்று(08) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி  உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்இந்த சம்பவம் தொடர்பாக CIDயினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இது தொடர்பில் பிள்ளையானை மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நேற்று இரவு 8.00 மணிக்கு கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement