முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(CID) முன்னிலையாகியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார், அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அத்துடன், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ. 130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(CID) முன்னிலையாகியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார், அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அத்துடன், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ. 130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.