• May 04 2024

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அழைத்துச் செல்லும் விமானம் தயார்..!!

Tamil nila / Apr 22nd 2024, 6:23 pm
image

Advertisement

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் 10-12 வாரங்களில் புறப்படும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

வசந்த காலத்தில் ருவாண்டாவிற்கு விமானங்கள் செல்லும் என்று உறுதியளித்திருந்தார். 

ஆனால் அவரது புதிய கால அட்டவணை ஜூலை வரை முதல் விமானம் புறப்படாது என்று பரிந்துரைத்தது.

டவுனிங் ஸ்ட்ரீடில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் ஒரு விமானநிலையம் தயார் நிலையில் இருப்பதாகவும், புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு ஒருவழிப் பயணமாக அழைத்துச் செல்வதற்கு வாடகை விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தத்  திட்டத்தை “இறுதியாக கிரிமினல் கும்பல்களின் வணிக மாதிரியை உடைத்து உயிர்களைக் காப்பாற்ற ஒரு தவிர்க்க முடியாத தடுப்பு” என்று விவரித்த   சுனக் மசோதா நிறைவேற்றப்பட்ட தருணத்திலிருந்து, அடையாளம் காணப்பட்டவர்களை அகற்றும் செயல்முறையை நாங்கள் தொடங்குவோம் என்றும் கூறியுள்ளார்.


புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அழைத்துச் செல்லும் விமானம் தயார். ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் 10-12 வாரங்களில் புறப்படும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.வசந்த காலத்தில் ருவாண்டாவிற்கு விமானங்கள் செல்லும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் அவரது புதிய கால அட்டவணை ஜூலை வரை முதல் விமானம் புறப்படாது என்று பரிந்துரைத்தது.டவுனிங் ஸ்ட்ரீடில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் ஒரு விமானநிலையம் தயார் நிலையில் இருப்பதாகவும், புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு ஒருவழிப் பயணமாக அழைத்துச் செல்வதற்கு வாடகை விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த இந்தத்  திட்டத்தை “இறுதியாக கிரிமினல் கும்பல்களின் வணிக மாதிரியை உடைத்து உயிர்களைக் காப்பாற்ற ஒரு தவிர்க்க முடியாத தடுப்பு” என்று விவரித்த   சுனக் மசோதா நிறைவேற்றப்பட்ட தருணத்திலிருந்து, அடையாளம் காணப்பட்டவர்களை அகற்றும் செயல்முறையை நாங்கள் தொடங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement