• Jan 11 2025

குளவி கொட்டுக்கு இலக்காகிய தோட்ட தொழிலாளர்கள்- விடுக்கப்பட்ட கோரிக்கை..!

Sharmi / Oct 28th 2024, 10:39 am
image

தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வ கந்தை பிரிவில் இடம்பெற்றது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்களுள் ஐந்து பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளி ஒருவர் அடங்கலாக ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று நாம் நாட்டிற்கு அதிகளவில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் எனவும், சகல பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் குளவி கொட்டுக்கு இலக்காகாத வகையில் உள்ள அங்கிகள் தோட்ட நிர்வாகம் எவ்விதமான கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு தீர்வு பெற்று கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய தோட்ட தொழிலாளர்கள்- விடுக்கப்பட்ட கோரிக்கை. தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வ கந்தை பிரிவில் இடம்பெற்றது.இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்களுள் ஐந்து பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளி ஒருவர் அடங்கலாக ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று நாம் நாட்டிற்கு அதிகளவில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் எனவும், சகல பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் குளவி கொட்டுக்கு இலக்காகாத வகையில் உள்ள அங்கிகள் தோட்ட நிர்வாகம் எவ்விதமான கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இதற்கு தீர்வு பெற்று கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement