• Mar 19 2025

பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம் - இலங்கையில் புதிய திட்டம்

Chithra / Mar 19th 2025, 8:22 am
image


மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி  அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார முச்சக்கர வண்டி திட்டம் நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று பத்தரமுல்ல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணமும் வழங்கப்படும் எனவும் பின்னர் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மீள்சுழற்சிக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் முதலில் வாதுவ பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.    

பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம் - இலங்கையில் புதிய திட்டம் மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி  அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த மின்சார முச்சக்கர வண்டி திட்டம் நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா நேற்று பத்தரமுல்ல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணமும் வழங்கப்படும் எனவும் பின்னர் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மீள்சுழற்சிக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் முதலில் வாதுவ பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement