• May 02 2024

தமிழக முகாம்களில் உள்ள 225 ஈழத்தமிழர்களின் நிலை! - வெளியான தகவல் Samugammedia

Chithra / Mar 28th 2023, 11:11 am
image

Advertisement

பொருளாதார நெருக்கடியால் தமிழகம் சென்ற 225 ஈழத்தமிழர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, ஓராண்டாகியும் அவர்கள் இன்னும் ஏதிலிகளாக பதிவு செய்யப்படவில்லை.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து ஏதிலிகளாக வர தொடங்கிய ஈழத் தமிழர்கள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்படி 19,316 குடும்பங்களைச் சேர்ந்த 58, 492 பேர் இந்த முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த முகாம்களின் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் 1,500 ரூபாவும், 12 வயதுக்கு மேல் உள்ளோருக்கு 1,000 ரூபாவும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கு 500 ரூபா உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இதனை தவிர வருடாந்த கல்வி உதவி, வீடு, மின்சாரம் உட்பட்ட குடும்பத்துக்கு மாதாந்தம் 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.

அவர்கள் வெளியே கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் முகாம்களுக்கு திரும்பவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏதிலிகளாக வருவோரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் திகதி முதல் தனுஷ்கோடிக்கு சென்ற 225 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தமிழக அரசால் ஏதிலிகளுக்கு வழங்கப்படக்கூடிய உதவித் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

அத்துடன் தற்போது ஏதிலிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்களை எப்படி கருதலாம் என தமிழக அரசு மத்திய அரசிடம் கருத்துக்கேட்டு கடந்த ஓராண்டாக காத்திருக்கிறது.

இந்தநிலையில் தற்போது இந்தியாவுக்கு வரும் ஈழத்; தமிழர்களை ஏதிலிகளாக பதிவு செய்து ஏற்கனவே தமிழக முகாம்களில் வசிப்போருக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும்.

இதற்கு தமிழக அரசு உடனடியாக பிரதமரையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்பதே மண்டபம் முகாமில் வசித்து வரும் ஈழத் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது என்று தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.


தமிழக முகாம்களில் உள்ள 225 ஈழத்தமிழர்களின் நிலை - வெளியான தகவல் Samugammedia பொருளாதார நெருக்கடியால் தமிழகம் சென்ற 225 ஈழத்தமிழர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, ஓராண்டாகியும் அவர்கள் இன்னும் ஏதிலிகளாக பதிவு செய்யப்படவில்லை.இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து ஏதிலிகளாக வர தொடங்கிய ஈழத் தமிழர்கள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.இதன்படி 19,316 குடும்பங்களைச் சேர்ந்த 58, 492 பேர் இந்த முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்த முகாம்களின் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் 1,500 ரூபாவும், 12 வயதுக்கு மேல் உள்ளோருக்கு 1,000 ரூபாவும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கு 500 ரூபா உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.இதனை தவிர வருடாந்த கல்வி உதவி, வீடு, மின்சாரம் உட்பட்ட குடும்பத்துக்கு மாதாந்தம் 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.அவர்கள் வெளியே கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் முகாம்களுக்கு திரும்பவும் அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால், 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏதிலிகளாக வருவோரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் தடுத்து வைத்தனர்.இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் திகதி முதல் தனுஷ்கோடிக்கு சென்ற 225 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு தமிழக அரசால் ஏதிலிகளுக்கு வழங்கப்படக்கூடிய உதவித் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.அத்துடன் தற்போது ஏதிலிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்களை எப்படி கருதலாம் என தமிழக அரசு மத்திய அரசிடம் கருத்துக்கேட்டு கடந்த ஓராண்டாக காத்திருக்கிறது.இந்தநிலையில் தற்போது இந்தியாவுக்கு வரும் ஈழத்; தமிழர்களை ஏதிலிகளாக பதிவு செய்து ஏற்கனவே தமிழக முகாம்களில் வசிப்போருக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும்.இதற்கு தமிழக அரசு உடனடியாக பிரதமரையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்பதே மண்டபம் முகாமில் வசித்து வரும் ஈழத் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது என்று தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement